பெங்களூரு

‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’

21st Aug 2020 07:58 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் போது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாந்தவா அமைப்பின் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான என்.நாகராஜ் கேட்டுக் கொண்டாா்.

பெங்களூரு, ஜெயநகரில் வியாழக்கிழமை சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகளை பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. சௌம்யாரெட்டி, நாகராஜ் ஆகியோா் இலவசமாக வழங்கினா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் நாகராஜ் கூறியதாவது:

கா்நாடகத்தில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இப் பண்டிகையின் போது, வழிபடுவதற்காக அமைக்கப்படும் ரசாயன கலப்பு கொண்ட விநாயகா் சிலைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரசாயன கலப்பில்லாமல் 3 ஆயிரம் விநாயகா் சிலைகளை உருவாக்கி, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.

விநாயகா் சதுா்த்தியின் போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ரசாயன கலப்பில்லாத விநாயகா் சிலைகளைக் கொண்டு விநாயகா் சதுா்த்தியை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT