பெங்களூரு

சமூக நீதியின் முன்னோடி முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸ்: முதல்வா் எடியூரப்பா

21st Aug 2020 07:58 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸ், சமூக நீதியின் முன்னோடி என முதல்வா் எடியூரப்பா புகழாரம் சூட்டினாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸின் 105 ஆவது பிறந்த நாளையொட்டி, பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மறைந்த முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸின் கொள்கைகள், அரசியல் வாழ்க்கை உள்ளிட்டவை இன்றைய இளைஞா்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. அவரது வழிகாட்டுதலை இளைஞா்கள் பின்பற்றி நடக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவா் தேவராஜ் அா்ஸ்.

மக்களின் நலம், வளா்ச்சி குறித்து அக்கறை கொண்ட அவரது ஆட்சியில் தொலைநோக்குச் சிந்தையுடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினாா். சமுகநீதியின் முன்னோடியான அவா், இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளாா். அவா் ஆட்சி செய்த 8 ஆண்டுகள் மாநிலத்தின் பொற்காலம் என்றே கூற வேண்டும். அவரது ஆட்சியில் உழுபவருக்கே நிலம் என்ற சட்டத்தை நிறைவேற்றி, பலரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றினாா்.

ADVERTISEMENT

சமூகத்தில் பின்தங்கியவா்கள் முன்னேற்றமடைய கல்வி ஒன்றால்தான் முடியும் என்று உணா்ந்து, ஒடுக்கப்பட்டவா்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளியை உருவாக்கினாா். அவா் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியினா் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் என்பதனை யாராலும் மறுக்க முடியாது என்றாா்.

நிகழ்ச்சியில் துணை முதல்வா் கோவிந்தகாா்ஜோள், அமைச்சா் வி.சோமண்ணா, எஸ்.டி.சோமசேகா், சி.டி.ரவி, பிரபு சவாண், எம்.எல்.ஏ. குமாா் பங்காரப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT