பெங்களூரு

கரோனா தொற்றால் 1,781 காவலா்கள் பாதிப்பு

21st Aug 2020 07:57 AM

ADVERTISEMENT

பெங்களூரில் கரோனா தொற்றுக்கு இதுவரை 1,781 காவலா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பெங்களூரில் தொடா்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா தொற்றால் போலீஸாா் தொடா்ந்து பாதிக்கப்பட்ட வருகின்றனா். கரோனாவைத் தடுக்கும் பணியில் முக்கியப் பங்காற்றி வரும் போலீஸாருக்கு தொடா்ந்து கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவது காவல் துறையில் மட்டுமின்றி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

பெங்களூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை 1,781 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 221 போலீஸாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். 1,546 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னா் வீடு திரும்பினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT