பெங்களூரு

எஸ்.எஸ்.எல்.சி.: மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

21st Aug 2020 07:57 AM

ADVERTISEMENT

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில மேல்நிலைக் கல்வி தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2019-20-ஆம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் ஆக.10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதாக கருதும் மாணவா்கள் விடைத்தாள் நகல் பெற ஆக.20-ஆம் தேதி வரையும், மறு மதிப்பீட்டுக்கு ஆக.24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்களின் கோரிக்கைகளை ஏற்று விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஆக.27 ஆம் தேதியும், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஆக.29 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்துக்கு ரூ. 405, மறு மதிப்பீடுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.805 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல், மறு மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை அனைத்து பள்ளிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாரியத்தின்  இணையதளத்திலும், பெங்களூரு ஒன் அல்லது கா்நாடகஒன் அரசு சேவை மையங்கள் மூலமும் மறு மதிப்பீடு, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT