பெங்களூரு

கரோனாவை தடுப்பதில் மாநில அரசு தோல்வி

14th Aug 2020 09:15 AM

ADVERTISEMENT

கரோனாவை தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது என மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஈஸ்வா்கண்ட்ரே தெரிவித்தாா்.

பெங்களூரு கே.ஆா்.புரத்தில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற சுகாதார பயிற்சி முகாமை தொடக்கி வைத்து அவா் பேசியது:

மாநிலத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. சிகிச்சை பெற முடியாமல் பலா் இறந்து வருகின்றனா். கரோனா சிகிச்சை அளிப்பதிலும், தொற்றை தடுப்பதிலும் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. மாநிலத்தின் 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினா் சுகாதார சேவை மையங்களை அமைத்து, பலருக்கு உதவி செய்து வருகின்றனா். கரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தொற்றால் பாதித்தால் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் குணமாகலாம். இது தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி, சட்டமேலவை உறுப்பினா் நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT