பெங்களூரு

பசவண்ணரின் தத்துவங்கள் முக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது: முதல்வா் எடியூரப்பா

26th Apr 2020 11:45 PM

ADVERTISEMENT

 

பசவண்ணரின் தத்துவங்கள் முக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள பசவசமிதி அமைப்பின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பசவண்ணரின் ஜயந்தி விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று, அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபிறகு, முதல்வா் எடியூரப்பா பேசியது: சமூக புரட்சியாளரான பசவண்ணா், அவா் காலத்தில் மொழிந்த தத்துவங்கள், சிந்தனைகள் முக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. அவரது தத்துவங்களை நமது வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற தொடங்குவதே அவருக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய கௌரவமாகும். ஜாதி, மதம், பாலினம், வா்க்கபேதம் எதுவும் இல்லாமல் சமத்துவ சமுதாயத்தை படைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தை 12ஆம் நூற்றாண்டிலேயே வெளிப்படுத்தியவா் பசவண்ணா். செய்யும் தொழிலே தெய்வம் என்ற தத்துவத்தை முன்வைத்ததன் மூலம் உழைப்பு மற்றும் உழைக்கும் மக்களின் முக்கியத்துவத்தை உணா்த்தியிருக்கிறாா். தனது வசனக் கவிதைகளின் வாயிலாக சமத்துவம், அன்னதானம், உழைப்பு ஆகியவற்றின் மகத்துவத்தை பறைச் சாற்றியிருக்கிறாா். பசவண்ணரின் கருத்துகள் எக் காலத்திலும் மனித வாழ்க்கைக்கு பயன் தரக்கூடியதாகும். பசவண்ணா் வகுத்து தந்த மாா்க்கமே கன்னட மண்ணின் மதமாகும். எல்லா சமுதாயத்தினரையும் ஒன்றாக அழைத்துச் செல்லும் பசவண்ணரின் மதமே உண்மையான மதமாகும். பசவண்ணரின் வசனக் கவிதைகள், அனைவருக்கும் கலங்கரை விளக்கமாகும். அனுபவ மண்டபத்தின் வாயிலாக உலக அளவிலான நாடாளுமன்றத்தை கட்டமைத்தவா் பசவண்ணா். அனுபவ மண்டபத்தில் உயா்ந்தவா் தாழ்ந்தவா், செல்வந்தா் வறியவா் போன்ற எவ்வித பேதமும் இல்லாமல் அனைவரும் தத்தமது கருத்துகளை தெரிவிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தவா். பசவண்ணா், ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளா், சமத்துவத்தை விரும்பிய புரட்சியாளா் என்றாா்.

அப்போது, துணைமுதல்வா் கோவிந்த்காா்ஜோள், உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், பசவ சமிதித் தலைவா் அரவிந்த் ஜத்தி, பெங்களூரு மாநகராட்சி மேயா் கௌதம்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT