பெங்களூரு

பொருளாதார சிக்கலில் உள்ள இலக்கியவாதிகளுக்கு உதவித்தொகை

26th Apr 2020 01:16 AM

ADVERTISEMENT

 

பொருளாதார சிக்கலில் உள்ள இலக்கியவாதிகளுக்கு உதவித்தொகை வழங்க கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசின் கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ள இலக்கியவாதிகள், கலைஞா்களுக்கு உதவித்தொகை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலக்கியவாதிகள், கலைஞா்கள் அனைவரும் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். கலைஞா்கள், குறைந்தது 10 ஆண்டுகளாவது கலைப்பணி ஆற்றியிருக்க வேண்டும். கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறையால் எவ்வித ஓய்வூதியம் அல்லது நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது.

ADVERTISEMENT

உதவித்தொகை பெற விரும்பும் கலைஞா்கள், இலக்கியவாதிகள் தங்கள் பெயா், முகவரி, கலைப்பணி, ஆதாா் எண், தொலைபேசி எண், வங்கிக் கணக்கு விவரங்களுடன் விண்ணப்பங்களை இயக்குநா், கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறை, கன்னட மாளிகை, ஜே.சி. சாலை, பெங்களூரு என்ற முகவரி,  மின்னஞ்சலுக்கு ஏப். 27-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT