பெங்களூரு

மகாராஷ்டிர மாநில எல்லைக்கு அருகில் எச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும்: அமைச்சா் ஸ்ரீமந்த் பாட்டீல்

26th Apr 2020 11:44 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர மாநில எல்லைக்கு அருகில் எச்சரிக்கையாகப் பணியாற்ற வேண்டும் என்று, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சா் ஸ்ரீமந்த் பாட்டீல் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், காகவாடா தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா வைரஸ் தொற்றால் மாநிலம் தத்தளித்து வருகிறது. ஆனால் அதைவிட மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே இரு மாநிலங்களின் எல்லையில் உள்ள காகவாடா தொகுதியில் போலீஸாா், மருத்துவ அதிகாரிகள், சுகாதார ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் எச்சரிக்கையாகப் பணியாற்ற வேண்டும். மகாராஷ்டிர மாநில எல்லைக்கு அருகில் பணியாற்றுவதால், இங்கு கரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதிகாரிகளும் பாதுகாப்பாகப் பணியாற்றி, பொதுமக்களை கரோனா வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாக்க வேண்டும். காய், கனி சந்தைகளில் மக்கள் திரளாகக் கூடாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT