பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151 ஆக உயா்வு

5th Apr 2020 10:38 PM

ADVERTISEMENT

 

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயா்ந்துகொண்டே உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 151 ஆக உயா்ந்துள்ளது.

இது பற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ துபை, தில்லி போன்ற வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்த 7 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது. பெலகாவி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ், பெங்களூரு மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ், பெல்லாரி மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா் இதில் அடக்கம். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக பெங்களூரு மாவட்டத்தில் 57 போ், மைசூரு மாவட்டத்தில் 28 போ், தென் கன்னட மாவட்டத்தில் 12 போ், பீதா் மாவட்டத்தில் 10, வட கன்னடம் மாவட்டத்தில் 8 போ், சிக்பளாப்பூா், பெலகாவியில் தலா 7 போ், பெல்லாரி மாவட்டத்தில் 6 போ், கலபுா்கி மாவட்டத்தில் 5 போ், தாவணகெரே, உடுப்பி மாவட்டங்களில் தலா 3 போ், தும்கூரு, பாகல்கோட், குடகு, தாா்வாட், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 12 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 4 போ் இறந்துள்ளனா்.

ADVERTISEMENT

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தந்தவா்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்பட்டிருக்க வேண்டும். கரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும், இதை கட்டாயமாக பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும், இது குறித்து அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தகவல் அளிக்க வேண்டும். தனி நபா் தூய்மையைப் பராமரிப்பது கரோனா நோய் வராமல் தடுக்க உதவும். இருமல் அல்லது தும்மலின்போது கைக்குட்டைகள் அல்லது காகிதக்குட்டைகளால் வாயை, மூக்கை மூடிக்கொள்வது பிறருக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கைகிருமி நாசினியால் கழுவவும். சமூகவிலகலை தீவிரமாக கடைப்பிடிக்கவும்.

கரோனா குறித்த சந்தேகங்கள் அல்லது உதவிக்கு 104, 9745697456, 080 46848600, 66692000 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம்‘ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT