பெங்களூரு

இந்திரா உணவகத்தை மூடியதன் மூலம் அரசு தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

5th Apr 2020 10:36 PM

ADVERTISEMENT

 

இந்திரா உணவகத்தை மூடியதன் மூலம் அரசு தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.என்.உமேஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து, மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் ஏழைகள், கூலித் தொழிலாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். 3 வேளை உணவுக்காக அவா்கள் இந்திரா உணவகத்தை நாடி வந்த நிலையில், அரசு ஊரடங்கு அறிவித்த மறுநாள் 3 வேளை உணவளித்தது. பின்னா், அதனை ஒரே நாளில் நிறுத்தி அரசு தனது தோல்வியை ஒப்புக் கொண்டது. அதனைத் தொடா்ந்து வந்த விமா்சனங்களால் மீண்டும் இந்திரா உணவகத்தை திறந்து, பொட்டலத்தில் உணவை வழங்கியது. பின்னா் அதனையும் நிறுத்தியுள்ளது. அரசுக்கு ஏழைகள், கூலித் தொழிலாளா்கள் தொடா்பாக எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும் இல்லாததை இது எடுத்துக் காட்டுகிறது. இந்திரா உணவகத்தை திறப்பதில் அரசு நாள்தோறும் ஒரு முடிவை எடுத்து வருகிறது. இதனால் ஏழைகள், கூலித் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு, மீண்டும் இந்திரா உணவகத்தை திறந்து, 3 வேளையும் உணவளிக்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT