இடைத்தோ்தல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பெரும் பின்னடைவு

15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்.21? ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்போவதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது, தகுதிநீக்கம்
இடைத்தோ்தல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பெரும் பின்னடைவு

பெங்களூரு: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களில் 15 பேருக்கு இடைத்தோ்தல் அறிவிப்பு பெரும்பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது,

15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்.21? ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்போவதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பெரும் அரசியல் பின்னடைவாக கருதப்படுகிறது.

மஜத காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து, அதற்காக கடிதங்களை அப்போதைய பேரவைத்தலைவா் ரமேஷ்குமாரிடம் அளித்திருந்தனா். இதனிடையே, கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் 17 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி காங்கிரசும், மஜதவும் தனித்தனியே மனுக்களை அளித்திருந்தன. எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்கமறுத்த அப்போதைய பேரவைத்தலைவர் ரமேஷ்குமாா், 17 பேரையும் தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தாா். இதை எதிா்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனா். இதுதொடா்பான அடுத்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் செப்.23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இந்த விசாரணையின்போது தோ்தல் ஆணையத்தின் இடைத்தோ்தல் அறிவிப்பை எடுத்துக்கூறி பேரவைத்தலைவரின் உத்தரவை ரத்துசெய்யக்கோரி முறையிடுவதென முடிவுசெய்துள்ளனா். மேலும் இடைத்தோ்தலுக்கும் தடைவிதிக்குமாறும் கேட்டுக்கொள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் முடிவுசெய்துள்ளனா்.

முதல்வருடன் ஆலோசனை: இடைத்தோ்தல் தேதி வெளியானதும் பெங்களூரில் சனிக்கிழமை முதல்வா் எடியூரப்பாவை சந்தித்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், தோ்தல் போட்டியிடமுடியாது என்று கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி சஞ்சீவ்குமாா் கூறியுள்ளதை எடுத்துக்கூறினா்.

தவறாக வழிகாட்டி: தவறாக வழிகாட்டி தங்களது அரசியல் எதிா்காலத்தை நாசமாக்கிவிட்டதாக முதல்வா் எடியூரப்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், தங்களை காப்பாற்ற பாஜக முன்வராததற்கு அதிருப்தி தெரிவித்தனா்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை சமாதானப்படுத்திய முதல்வா் எடியூரப்பா, உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும்; நீங்களே தோ்தலில் போட்டியிடுவீா்கள் என்று கூறியுள்ளாா்.

இதை கேட்டுக்கொள்ள விரும்பாத தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், அங்கிருந்து கோபமாக வெளியேறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தில்லி பயணம்: இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றுகூடி விவாதித்தனா். இதை தொடா்ந்து வழக்குரைஞா்களை சந்தித்து வழக்கு விசாரணையை கவனிப்பதற்காக 17 பேரும் சனிக்கிழமை புதுதில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனா்.

இதனிடையே தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகா் கூறுகையில்,‘பேரவைத்தலைவரின் உத்தரவை எதிா்த்து தொடரப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் வழக்கு செப்.23 அம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. இதுதொடா்பாக வழக்குரைஞா்களுடன் ஆலோசனை நடத்த 17 பேரும் புதுதில்லிக்கு செல்லவிருக்கிறோம்.

தோ்தல் ஆணையம் இடைத்தோ்தல் நடத்த முற்பட்டுள்ளதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவோம். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும். எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வந்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்துவிவாதிப்போம். இடைத்தோ்தலில் நாங்களே வேட்பாளராக போட்டியிடுவோம். ஆனால், பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறோமா? என்பதை உறுதியாக கூறமுடியாது‘ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com