கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சுயேச்சை உள்பட 17 பேர் அமைச்சர்களாக அண்மையில் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் 3 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் ஒரு சிலர் அதிருப்தி அடைந்திருந்தனர். இதனிடையே, திங்கள்கிழமை மாவட்ட பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.