பெங்களூரு

பெலகாவி- வாஸ்கோடகாமா ரயில் சேவையில் மாற்றம்

13th Sep 2019 09:50 AM

ADVERTISEMENT

பெலகாவி-வாஸ்கோடகாமா இடையேயான சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பு: பெலகாவி நிலையத்திலிருந்து வாஸ்கோடகாமாவுக்கு புறப்படும் வாரம் இருமுறை சிறப்பு ரயில் எண் 06921 பெலகாவியிலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை 6.20 மணிக்குப் பதிலாக, பிற்பகல் 12.30 மணியளவில் புறப்பட்டு, பிற்பகல் 12.40 மணிக்குப் பதிலாக, மாலை 6.20 மணியளவில் வாஸ்கோடாகாமா ரயில் நிலையத்தை சென்றடையும்.
 மறு மார்க்கத்தில் ரயில் எண் 06922, வாஸ்கோடகாமாவிலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் பிற்பகல் 3.55 மணிக்குப் பதிலாக, காலை 6.05 மணியளவில் புறப்பட்டு, இரவு 9.25 மணிக்கு பதிலாக, முற்பகல் 11.20 மணியளவில் வாஸ்கோடாகாமா ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த மாற்றம் செப். 13-ஆம் தேதி முதல் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT