பெங்களூரு

பெங்களூரில் செப். 25-இல்  அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

10th Sep 2019 10:55 AM

ADVERTISEMENT

பெங்களூரில்  அஞ்சல் சேவை குறைதீர் முகாம் செப். 25-இல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக அஞ்சல் வட்டத்தின் பெங்களூரு கிழக்கு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரில்  மியூசியம் சாலையில் உள்ள அஞ்சல் வட்ட பெங்களூரு கிழக்கு மண்டல அஞ்சலகங்கள் மூத்த கண்காணிப்பாளர் அலுவலக  அரங்கில் செப்டம்பர் 25-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் அஞ்சல் சேவை குறைதீர்முகாம் நடத்தப்படுகிறது. 
பெங்களூரு கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் குறைகள் ஏதாவதுஇருந்தால், அவற்றை அஞ்சலகங்களின் மூத்த கண்காணிப்பாளர், கர்நாடக அஞ்சல் வட்ட பெங்களூருமண்டல கிழக்கு அலுவலகம், பெங்களூரு-560025 என்ற முகவரிக்கு செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 
புகார்களை என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.  புகார்களுடன் ஆதாரங்களை இணைப்பது நல்லது. மேலும் புகார் கடிதத்தில் தெளிவான தொடர்புமுகவரியை குறிப்பிடவும். மேலும் விவரங்களுக்கு 080-22392556, 22392583 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT