பெங்களூரு

பெங்களூரில் செப். 15-இல் திமுக முப்பெரும் விழா

10th Sep 2019 10:33 AM

ADVERTISEMENT

கர்நாடக மாநில திமுக சார்பில் முப்பெரும் விழா பெங்களூரில்  செப்டம்பர் 15-இல் நடைபெறுகிறது.
பெரியார்,  அண்ணா பிறந்த நாள்கள், திமுக உருவான நாள் ஆகிய முப்பெரும் விழா  பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் செப். 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை வகிக்கிறார். கட்சிக் கொடியை மூத்தச் செயல்வீரர்  இரா.நாம்தேவி ஏற்றிவைக்கிறார்.  பின்னர்,  பொன்.சுப்பிரமணியன் குறள் வணக்கம் பாடுகிறார். 
இதையடுத்து,  திருவள்ளுவர்,  அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கும்,  பெரியார்,  அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களுக்கும்  மாலை அணிவிக்கப்படுகிறது.
கட்சியின் மாநில அவைத்தலைவர் மொ.பெரியசாமி,  மாநில பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT