பெங்களூரு

கொள்ளை முயற்சி: 5 பேர் கைது

10th Sep 2019 10:31 AM

ADVERTISEMENT

கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக,  5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு சந்திரலேஅவுட் காவல் சரகம் மெட்ரோ லேஅவுட் சுரங்கப்பாதை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் கொள்ளையடிக்கப் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத் தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்றனர்.
அப்போது, அங்கிருந்த பேடரஹள்ளி ரவி (24), லக்கெரே அம்ருத் (18), சதீஷ் (23), நவீன்குமார் (23), மண்டியா மாவட்டம் பிரதாப் (27) ஆகியோரை கைது செய்தனர். 
இவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் 5 பேர் மீது கொலை, கொலைமுயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.  இதையடுத்து, 5 பேரிடமும் சந்திராலேஅவுட் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT