பெங்களூரு

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

7th Sep 2019 10:42 AM

ADVERTISEMENT

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகையைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மத்திய ராணுவ வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் ராணுவவீரர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்காக பிரதமரின் கல்வி ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ராணுவப்படை, விமானப்படை, கப்பற்படைகளில் ஹவில்தார் பதவி வரையில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களின்குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. பியூசி, பட்டயம், பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகளில் குறைந்தப்பட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை நவ.15-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு  w‌w‌w.‌k‌s​b.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT