பெங்களூரு

முதுநிலை இந்திய மருத்துவ பட்டப் படிப்பு நுழைவுத்தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

7th Sep 2019 10:43 AM

ADVERTISEMENT

முதுநிலை இந்திய மருத்துவப் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு செப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2019-2020-ஆம் கல்வியாண்டில் கர்நாடகத்தில் உள்ள முதுநிலை இந்திய மருத்துவப் பட்டப் பயிற்சி அளிக்கும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க தகுதியான மாணவர்களை தெரிவுசெய்வதற்கு பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 
இந்த தேர்வு எழுதுவதற்கு, அகில இந்திய முதுநிலை பல் மருத்துவ நுழைவுத்தேர்வில் (A​I​P​G​D​E​E) தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டவர்களிடம் இருந்து கர்நாடக தேர்வு ஆணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 
இத்தேர்வுக்கு இணையதளம் மூலம் செப்.7-ஆம் தேதி மாலை 4 மணி முதல் செப்.10-ஆம் தேதி மாலை 5.30 மணிவரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT