பெங்களூரு

"மக்களிடம் கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்'

7th Sep 2019 10:04 AM

ADVERTISEMENT

மக்களிடம் கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று கிழக்கு மண்டல உதவி காவல் ஆணையர் பிரஷாந்த் சித்தண்ண கெளடா தெரிவித்தார்.
பெங்களூரு கோல்ஸ்பூங்காவில் வெள்ளிக்கிழமை அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடக்கிவைத்து அவர் பேசியது: இந்தியாவில் கண் பார்வையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஆனால், கண் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் உள்ளது. இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கண்களில் பிரச்னை உள்ளது. இதே நிலைமை நீடித்தால், 2020 ஆம் ஆண்டிற்குள் ஒரு கோடி பேர் கண்பார்வை இழக்கக்கூடும். எனவே கண்தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும். 
விபத்துகளில் இறப்பவர்கள் மட்டுமின்றி, இயற்கையாக இறப்பவர்களும் கண் தானம் செய்யலாம். ஆனால், நம்மில் சிலருக்கு உள்ள மூடநம்பிக்கையால் பலர் கண் தானம் செய்வதை தவிர்ப்பது வேதனை அளிக்கிறது. இறந்த பின் நமது உறுப்புகளை புதைப்பதாலோ, எரிப்பதாலோ எந்த யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஆனால் இறந்த பின் நம் கண்களை தானமாக வழங்கினால் அதன்மூலம் பலருக்கு கண் பார்வை கிடைத்து, அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக அனுபவிக்க முடியும். 
நாம் இறந்த பின்னும் சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அது கண் தானத்தின் மூலமே சாத்தியமாகும். கண் தானம் குறித்து அரசு மட்டுமின்றி, தனியார்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் கண் மருத்துவர்கள் ரகுநாகராஜ், அர்ச்சனா, சஞ்சனாவாஸ்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT