பெங்களூரு

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

7th Sep 2019 10:00 AM

ADVERTISEMENT

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018- 19ஆம் ஆண்டுக்கான அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை செயல்படுத்துவதற்காக கணினி அடிப்படையிலான கலந்தாய்வுக்கு தகுதியான பணியிடங்களின் பட்டியலை ஜூலை 30-ஆம் தேதி பொதுக்கல்வித் துறையின் ஆணையரகம் வெளியிட்டுள்ளது. 
இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வரிசைப்படி பெங்களூரு, பசவனகுடியில் உள்ள டென் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் வரிசையின்படி ஒதுக்கப்பட்டுள்ள தேதி, நேரத்தில் மட்டும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ஆசிரியர்களின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்படும். 
செப்.7-ஆம் தேதி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான பட்டியலின் வரிசைப்படி 1 முதல் 15 வரையில் காலை 10 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்படும். செப்.7-ஆம் தேதி உடற்பயிற்சி ஆசிரியர்களின் பணியிடமாற்றத்திற்கான பட்டியலின் வரிசைப்படி 1 முதல் 8 வரையிலும், உதவி ஆசிரியர்களின் பணியிடமாற்றத்திற்கான பட்டியலின் வரிசைப்படி 1 முதல் 75 வரையிலும் காலை 10.30மணி முதல் பங்கேற்கலாம். செப்.9-ஆம் தேதி உதவி ஆசிரியர்களின் பணியிடமாற்றத்திற்கான பட்டியலின் வரிசைப்படி 75 முதல் 159 வரையில் காலை 11 மணி முதல் பங்கேற்கலாம். செப்.11-ஆம் தேதி காலை 10மணி முதல் உடன்பாட்டு பணியிடமாற்றங்களுக்கான பட்டியலின் 4-ஆவது அட்டவணையின்படி, உதவி ஆசிரியர்களின் பணியிடமாற்றத்திற்கான பட்டியல் 75 முதல் 159 வரையில் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT