பெங்களூரு

விநாயகர் சிலைகள் ஊர்வலம்: ஜே.சி.நகரில் இன்று 144 தடை உத்தரவு

4th Sep 2019 08:56 AM

ADVERTISEMENT

பெங்களூரு வடக்கு மண்டலத்தில் விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி புதன்கிழமை(செப். 4) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 பெங்களூரு வடக்கு மண்டலத்தில் உள்ள ஜே.சி.நகர், ஆர்.டி.நகர் காவல் சரகங்களில் புதன்கிழமை (செப்.4) கூட்டு விநாயகர் சிலைகளின் ஊர்வலங்கள் நடைபெற உள்ளது. ஊர்வலத்தின் போது விஷமிகள் கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, புதன்கிழமை காலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை ஜே.சி.நகர், ஆர்.டி.நகர் காவல் சரகங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 தடை உத்தரவின் போது விநாயர்கர் சிலைகள் ஊர்வலத்தை தவிர அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலத்தையொட்டி ஜே.சி.நகர், ஆர்.டி.நகர் காவல் சரகங்களில் புதன்கிழமை காலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT