பெங்களூரு

மகதாயி நதிநீர்ப் பங்கீடு: மகாராஷ்டிர முதல்வருடன் எடியூரப்பா சந்திப்பு

4th Sep 2019 08:48 AM

ADVERTISEMENT

கர்நாடக- மகாராஷ்டிர இடையே மகதாயி நதிநீர் பங்கீடு தொடர்பாக, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிûஸ கர்நாடக முதல்வர் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
 மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர், எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியது:-
 வட கர்நாடகத்தில் பல இடங்களில் தற்போது பலத்த மழை பெய்துள்ளபோதும், அங்கு தொடர்ந்து குடிநீர் பிரச்னை நிலவுகிறது.
 இதனால், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிûஸ சந்தித்து மகதாயி நதிநீதிப் பங்கீடு, கலசா பண்டூரி கால்வாய்த் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினேன். மகதாயி விவகாரத்தில் கோவா அரசு தொடர்ந்து பல்வேறு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
 இதுதொடர்பாக கோவா மாநில முதல்வரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளேன். கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை, வட கர்நாடகத்தில் குடிநீருக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இயற்கை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT