பெங்களூரு

பெலகாவியிலிருந்து சிறப்பு ரயில் சேவை

4th Sep 2019 09:06 AM

ADVERTISEMENT

பெலகாவி-வாஸ்கோடகாமா இடையே புதிதாக வாரம் இருமுறை சிறப்பு ரயில் சேவையை இயக்க தென் மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பெலகாவியிலிருந்து வாஸ்கோடகாமாவிற்கு வாரம் இருமுறை புதிதாக ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
 ரயில் எண்-06921-பெலகாவி-வாஸ்கோ-ட-காமா இடையேயான புதிய சிறப்பு ரயில் சேவையை செப். 4-ஆம் தேதி(புதன்கிழமை) காலை 11 மணி அளவில் பெலகாவி ரயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி தொடக்கிவைக்கிறார். இதைத் தொடர்ந்து கோவா மாநிலம், தூத்சாகர் ரயில் நிலையத்தில் ரயில் எண்-06922-வாஸ்கோடகாமா-பெலகாவி இடையேயான புதிய சிறப்பு ரயில் சேவையையும் அவர் தொடக்கிவைக்கிறார்.
 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் எண்-06921-பெலகாவி-வாஸ்கோடகாமா இடையேயான வாரம் இருமுறை புதிய சிறப்பு ரயில் பெலகாவியிருந்து புறப்பட்டு, அன்று பிற்பகல் 12.40 மணிக்கு வாஸ்கோடகாமா ரயில் நிலையம் சென்றடைகிறது.
 இதேபோல மறு மார்க்கத்தில் ரயில் எண்-06922-வாஸ்கோடகாமா-பெலகாவி இடையேயான வாரம் இருமுறை புதிய சிறப்பு ரயில் அதேநாளில் வாஸ்கோடகாமாலிருந்து பிற்பகல் 3.55 மணிக்குப் புறப்பட்டு, பெலகாவியை இரவு 9.25 மணியளவில் வந்தடைகிறது.
 பெலகாவியிலிருந்து கானாப்பூர், மட்காவ்ன், லோண்டா, தூத்சாகர், குலேம், சாந்தர், மட்காவன், தபோலீம் வழியாக வாஸ்கோடாகாமா ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. ரயிலில் 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான 2 பெட்டிகள் உள்ளிட்ட 10 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும்.
 இந்த சிறப்பு ரயில் சேவை 3 மாதங்கள் வரை இருக்கும். பயணிகளின் ஆதரவைத் தொடர்ந்து நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT