பெங்களூரு

"பெங்களூரில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் அதிகரித்து வருகிறது'

4th Sep 2019 09:07 AM

ADVERTISEMENT

பெங்களூரில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் உயர்ந்து வருவதாக வைஷ்ணவி ஷெரினே குழுமத்தின் மேலாண் இயக்குநர் கோவிந்தராஜு தெரிவித்தார்.
 பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கட்டேரா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெங்களூரில் கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் வைஷ்ணவி ஷெரினே குழுமம், எலஹங்காவில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் திட்டத்தில் கட்டேரா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
 பசுமை, 30 சதவீதம் தண்ணீரை பயன்படுத்தி உறுதியான கட்டுமானம், குறை கால அவகாசத்தில் கட்டுவதற்கான தொழில்நுட்பத்தை கட்டோரா குழுமத்தினர் கட்டுமானத்தில் புகுத்தி வருகின்றனர். மேலைநாடுகளில் பயன்படுத்தும், இந்த நவீன தொழில்நுட்பத்தை பெங்களூரில் முதல் முறையாக நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம்.
 பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரிக்குப் பிறகு தேசிய அளவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெங்களூரில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் உயர்ந்து வருகிறது. பெங்களூரில் புதிய கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிநீர் பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும்.
 இதேபோல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கழிவு நீரை சுத்தப்படுத்தி, அங்குள்ள பூங்காவில் செடி,கொடிகளுக்கு பாய்ச்சவும், கழிவறைகளை சுத்தம் பயன்படுத்தப்படுகிறது. இதனை பரவலாக கடைப்பிடித்தால் தண்ணீர் பிரச்னை வர வாய்ப்பில்லை என்றார். நிகழ்ச்சியில் கட்டேரா குழுமத்தின் நிர்வாகி நஜீப்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT