பெங்களூரு

பிரதமரிடம் கூடுதல் வெள்ள நிவாரண நிதி கோரப்படும்: எடியூரப்பா

4th Sep 2019 09:05 AM

ADVERTISEMENT

கர்நாடகம் வரும் பிரதமரிடம் கூடுதல் வெள்ள நிவாரண நிதி கோரப்படும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
 பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வரும் செப். 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட கர்நாடகம் வருகிறார். அப்போது, அவரிடம் கூடுதல் வெள்ள நிவாரண நிதி வழங்கக் கோரிக்கை வைப்போம். பிரதமர் மோடியிடம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து அனைத்து தகவல்களையும் அளித்துள்ளோம். அவருக்கும் மாநிலத்தின் பிரச்னை முழுமையாக புரிந்துள்ளது. எனவே, கூடுதலாக வெள்ள நிவாரண நிதி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT