பெங்களூரு

டி.கே.சிவக்குமார் மீதான விமர்சனம்: மன்னிப்பு கோரினார் அமைச்சர் ஸ்ரீராமுலு

4th Sep 2019 09:07 AM

ADVERTISEMENT

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீதான விமர்சனத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு மன்னிப்பு கோரினார்.
 காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீதான வழக்குகள் தொடர்பாக தில்லியில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஸ்ரீராமுலு, உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்றார்.
 அமைச்சர் ஸ்ரீராமுலுவின் கருத்துக்கு தில்லியில் டி.கே.சிவக்குமார் கண்ணீர் சிந்தி, வேதனை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஸ்ரீராமுலு, முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் குறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவித்தேன். தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கவில்லை. என்றாலும், எனது கருத்து அவரை வேதனைப்படுத்தியிருந்தால், அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT