பெங்களூரு

ஏழைகளுக்கு வீடுகள் வழங்க திட்டம்: அமைச்சர் சோமண்ணா

4th Sep 2019 09:06 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் சொந்தமாக வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்தார்.
 பெங்களூரு விகாஷ் செளதாவில் செவ்வாய்க்கிழமை தனது அலுவலகத்தை பூஜை செய்து திறந்துவைத்து அவர் பேசியது: கர்நாடகத்தில் சொந்தமாக வீடு இல்லாமல் பலர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, வீடுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். வீட்டு வசதித் துறையில் முந்தைய அரசு மேற்கொண்ட அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
 இதற்கு முன்பு வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த அனுபவம் எனக்குள்ளதால், இத்துறையை சிறப்பாக வகிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
 முதல்வர் எடியூரப்பாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் பணியாற்ற முடிவு செய்துள்ளேன். மாநிலத்தில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் வீடுகளை சொந்தமாக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
 மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்ற பிறகு பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இது மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்கட்டமாக நிவாரணத்தொகையை மாநில அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்கியவுடன், நிவாரணத்தொகையையும், பயிர்சேதம், சாலை, பாலங்கள் உள்ளிட்டவைகளுக்கான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT