பெங்களூரு

ஆசிரியர்கள் பணிமாறுதல்: குழப்பங்களைத் தீர்க்க நடவடிக்கை: அமைச்சர் சுரேஷ்குமார்

4th Sep 2019 08:55 AM

ADVERTISEMENT

ஆசிரியர்கள் பணிமாறுதலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
 பெங்களூரு பசவேஸ்வரா நகரில் உள்ள அமைச்சர் சுரேஷ்குமார் இல்லத்தின் முன் செவ்வாய்க்கிழமை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் சுரேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சுரேஷ்குமார் கூறியது:
 2017 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் கல்வித் துறை அமைச்சராக தன்வீர்சேட் பணியாற்றிய போது, ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாறுதல் வழங்கப்பட்டது. இதில் குழப்பங்கள் ஏற்பட்டத்தால், ஒருசில ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவியல் ரீதியில் உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 இதுதொடர்பாக ஆசிரியர்கள் என்னை சந்தித்து மனு அளித்து, தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள், சவால்களை எடுத்துரைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை பரிவோடு பரிசீலிக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT