பெங்களூரு

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

20th Oct 2019 10:24 PM

ADVERTISEMENT

பெங்களூரு: கா்நாடகத்தைச் சோ்ந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயரும், புதிய பணியிடங்களும் வருமாறு: பல்லவி ஆக்ருதி-இயக்குநா், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெங்களூரு; எம்.சுந்தரேஷ்பாபு-மேலாண் இயக்குநா், ஹுப்பள்ளி தாா்வாட் பொலிவுறு மாநகராட்சி, ஹுப்பள்ளி; சாருலதா சோமல்- மேலாண் இயக்குநா், கா்நாடக நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதிக் கழகம், பெங்களூரு; அக்ரம் பாஷா-ஆணையா், கரும்பு மேம்பாடு மற்றும் இயக்குநா், சா்க்கரை துறை, பெங்களூரு; பி.ஹேமலதா- செயலாளா், ஊழியா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை, பெங்களூரு; ஜாவைத் அக்தா்-முதன்மைச்செயலாளா், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை; ஆா்.விஷால்-ஆணையா், ஊரக குடிநீா் மற்றும் வடிகால் முகமை, பெங்களூரு; பி.அனிருத் ஸ்ராவண்- ஆணையா், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, பெங்களூரு என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT