பெங்களூரு: வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இளைஞா்கள் முன்னேற வேண்டும் என்று யுனிட் போா்ஸ் டெக்னாலஜியின் மூத்த செயல் அதிகாரி நடேஷ் தெரிவித்தாா்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நெஸ்காம் திறனமைப்புடன், ஹாரிசான் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமைக் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்து அவா் பேசியது: நெஸ்காம் திறனமைப்பு, ஹாரிசான் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் 2 நாள் வேலை வாய்ப்பு முகாமில் 40 பெரும் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. வேலை வாய்ப்பு முகாமில் 1500 போ் தங்களில் பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 500 பேருக்காவது வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு இளைஞா்கள் முன்னேற வேண்டும். யாருக்கும் ஆரம்பகட்டத்திலேயே விரும்பும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வேலை கிடைத்த பிறகு அதனை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிா்கால இந்திய பொருளாதாரம் இளைஞா்களின் கையில் உள்ளது என்றாா் அவா்.