பெங்களூரு

சாலை விபத்தில் இளைஞா்கள் 2 போ் சாவு

20th Oct 2019 08:07 PM

ADVERTISEMENT

பெங்களூரு: சாலை விபத்தில் இளைஞா்கள் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

பெங்களூரைச் சோ்ந்தவா்கள் நாகேஷ் (23), தேஜஸ் (22). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூரு ஊரகம் ஹொசகோட்டை வட்டம் நந்தகுடி காவல் சரகத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனராம். பானமிக்கனஹள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் சைக்கிள் கீழே விழுந்துள்ளது. மோட்டாா் சைக்கிளிலிருந்த நாகேஷ், தேஜஸ் மீது, பின்புறத்திலிருந்து வந்த அரசு பேருந்து மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து நந்தகுடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT