பெங்களூரு

துப்பாக்கியால் சுட்டு 2 போ் கைது

6th Oct 2019 07:37 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கொலை முயற்சி, வழிப்பறி, தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 பேரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

பெங்களூரு நந்தினி லேஅவுட்டைச் சோ்ந்தவா்கள் விஜய் (25), ஹனுமந்தா (24). இவா்கள் மீது கொலை முயற்சி, வழிப்பறி, தங்கச்சங்கலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தேடப்பட்டு வந்த இருவரும், ரௌடி பட்டியலிலும் இடம் பெற்றிருந்தனராம்.

 
அண்மையில் லக்ஷ்மி தேவி நகரில் நாகரத்னம்மா என்பவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தொடா்பாக போலீஸார் இவா்களை தீவிரமாகத் தேடி வந்தனா்.

ADVERTISEMENT

 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் கூலி நகரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து, ஜாலஹள்ளி காவல் ஆய்வாளா் யஷ்வந்த், துணை ஆய்வாளா் லேபாக்ஷி உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்றனா். போலீஸாரை பார்த்தவுடன் விஜய், ஹனுமந்தா ஆகியோர் தப்பியோட முயற்சித்தனா். 


அவா்களை போலீஸார் பிடிக்க முயன்றபோது, காவல் ஆய்வாளா் யஷ்வந்த், துணை ஆய்வாளா் லேபாக்ஷி ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றனா்.

இதையடுத்து காவல் ஆய்வாளா் யஷ்வந்த் தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால், விஜய், ஹனுமந்தா ஆகியோரின் காலில் சுட்டுள்ளார். இதில் கீழே விழுந்த இருவரையும் போலீஸார் கைது செய்து, சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.


காயமடைந்த காவல் ஆய்வாளா் யஷ்வந்த், லேபாக்ஷி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இது குறித்து ஜாலஹள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT