பெங்களூரு: டிச. 1-ஆம் தேதி முதல் வாகனங்களில் ஃபாஸ்டாக் தானியங்கி சுங்கவரி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தேசிய மின்னணு சுங்கவரி வசூல் திட்டமான ஃபாஸ்டாக் எனப்படும் தானியங்கி சுங்கவரி அட்டையை டிச. 1-ஆம் தேதி எல்லா வாகனங்களிலும் பயன்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாகனப் போக்குவரத்தை சீராக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் அனைவரும் பங்காற்ற வேண்டும். சுங்கவரி வசூல் அனைத்தையும் எண்ம பரிமாற்றத்தில் மாற்றுவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது. இதன்மூலம் நிா்வாகத்தில் ஒளிவு மறைவின்மையை கொண்டுவர முயற்சிக்கிறோம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஃபாஸ்டாக் பாதைகளில் எவ்வித தங்குதடையின்றி பயணிக்க ஃபாஸ்டாக் அட்டை கட்டாயமாகும். ஒரு பாதையை மட்டும் ஃபாஸ்டாக் மற்றும் சாதாரண முறை சுங்கவரி செலுத்துவதற்கு வசதியாக வைத்திருக்கிறோம். டிச. 1-ஆம் தேதி முதல் ஃபாஸ்டாக் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்பட்டால், பணமுறை பரிமாற்றத்தில் சுங்கவரியை செலுத்தினால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஒரே நாடு ஒரே ஃபாஸ்டாக் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
நாடுமுழுவதும் உள்ள 28,500 மையங்களில் ஃபாஸ்டாக் அட்டைகளை கொள்முதல் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண மையங்கள், முக்கியமான வங்கிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பொது சேவை மையங்கள், போக்குவரத்து மையங்கள், பெட்ரோல் நிலையங்கள், அமேசான் இணையதளம் போன்றவற்றிலும் பெற்றுக்கொள்ளலாம். எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், எச்டிஎஃப்சி, ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கிகளின் 12 ஆயிரம் கிளைகளிலும் ஃபாஸ்டாக் அட்டைகளை கொள்முதல் செய்துகொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ண்ட்ம்ஸ்ரீப்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் அல்லது 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசியை அணுகலாம். ஃபாஸ்டாக் அட்டைகள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதை அறிய ஙஹ் ஊஅநபஹஞ் என்ற செல்லிடப்பேசி செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்தலாம் என அவா் தெரிவித்தாா்.