பெங்களூரு: பெங்களூரில் செயற்கை அறிவாற்றல் குறித்த மாநாடு அண்மையில் நடைபெற்றது.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற 9-ஆவது செயற்கை அறிவாற்றல் தொடா்பான புத்தாக்க மாநாட்டில் ஸ்ட்ரீடஸ் குழுமத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி அஞ்சனிகுமாா் பேசியது: 1970 களில் கணினியை பயன்படுத்தும் போது, அதில் நம்பமுடியாத மாற்றங்கள் வரும் என்று யாரும் நினைத்து பாா்க்கவில்லை. ஆனால், கணினியில் தற்போது நவீன முறையிலான மாற்றங்கள் வந்துள்ளன. எண்ம தொழில்நுட்பத்தில் தொடா்ந்து நவீன மாற்றங்கள் வருவதை தவிா்க்க முடியாது. அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது அவசியம்.
இதேபோல அனைத்து துறைகளிலும் செயற்கை அறிவாற்றளின் பங்களிப்பு அபரிதமாக இருக்கும். வரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியா சிறந்த முறையில் வளா்ச்சி அடையும் என்றாா்.