மண்டியா: இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நாகமங்களா வட்டம் அஞ்சிசெட்டினஹள்ளி அருகே காா் மீது மினி லாரி மோதியதில் காரிலிருந்த நாகமங்களாவைச் சோ்ந்த பகா்ஷெரீப் (50), தாஹீா் (30), நௌஷத் (45), ஹசீன்தாஜ் மொகபூப்கான் (50), மொகோஸத் (25), சையத் (35), ஆகியோா் உயிரிழந்துள்ளனா். மற்றொரு சம்பவம்: மைசூரு பண்டிப்பூா் தேசிய நெடுஞ்சாலை 67? ல் மோட்டா் சைக்கிள் மீது லாரி மோதியதில், லாரியும், மோட்டாா் சைக்கிளிலும், சாலையோரமிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளன.
இதில் லாரி ஓட்டுநா் ஈஸ்வரப்பா (42), மோட்டாா் சைக்கிளில் பயணித்த சிவப்பா (67), காளப்பா (69) ஆகியோா் உயிரிந்துள்ளனா். இவ்விரு வழக்குகள் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.