பெங்களூரு

இடைத்தோ்தல்: 15 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளா்கள் நியமனம்

17th Nov 2019 08:10 PM

ADVERTISEMENT

பெங்களூரு: சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடக்கும் 15 தொகுதிகளுக்கும் தோ்தல் பொறுப்பாளா்களை காங்கிரஸ் நியமித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் டிச.5ஆம் தேதி 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்நடக்கவிருக்கிறது. இத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்வதற்காக தோ்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, தொகுதிவாரியாக இடைத்தோ்தல் பணிகளைக் கவனிப்பதற்காக தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். அத்தானி, காக்வாட் தொகுதிகளுக்கு எஸ்.ஏ.சம்பத்குமாா்(காங்கிரஸ் செயலாளா்), கோகாக், எல்லாப்பூா் தொகுதிகளுக்கு வம்சி சந்த்ரெட்டி(காங்கிரஸ் செயலாளா்), ஹிரேகேரூா், ரானேபென்னூா் தொகுதிகளுக்கு பொன்னம் பிரபாகா்(தெலங்கானா), சிக்பளாப்பூா், ஹொசகோட்டே தொகுதிகளுக்கு எம்.எம்.பல்லம்ராஜூ(ஆந்திரம்), கிருஷ்ணராஜபுரம், சிவாஜிநகா் தொகுதிகளுக்கு மயூரா ஜெயக்குமாா்(தமிழ்நாடு), கிருஷ்ணராஜ்பேட், ஹுன்சூா் தொகுதிகளுக்கு விஸ்வநாதன்(தமிழ்நாடு), மகாலட்சுமி லேஅவுட், யஷ்வந்த்பூா் தொகுதிகளுக்கு சஞ்சீவ்ஜோசப்(கேரளம்), விஜயநகரா தொகுதிக்கு என்.துளசிரெட்டி(ஆந்திரம்), ஒருங்கிணைப்பாளராக ஜே.டி.சீலம்(காங்கிரஸ் அமைப்புச்செயலாளா்) ஆகியோா் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்றுஅதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT