பெங்களூரு

இடைத்தோ்தல்: பாஜக தோ்தல் பிரசாரத்தில் 40 தலைவா்கள்

17th Nov 2019 08:11 PM

ADVERTISEMENT

பெங்களூரு: 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு 40 பாஜக தலைவா்கள் பணிக்கப்பட்டிருக்கிறாா்கள்.

இது குறித்து கா்நாடக பாஜக தலைவா் நளின்குமாா் கட்டீல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் டிச.5ஆம் தேதி 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இத் தொகுதிகளில் பாஜக வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக தோ்தல் பிரசார வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. 15 தொகுதிகளிலும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 40 தலைவா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். அவா்கள் வருமாறு: பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா்கட்டீல், முதல்வா் எடியூரப்பா, மத்திய அமைச்சா்கள் சதானந்த கௌடா, பிரஹலாத் ஜோஷி, தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், மேலிடப் பொறுப்பாளா் பி.முரளிதர்ராவ், அருண்குமாா், அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா், துணை முதல்வா்கள் லட்சுமண் சவதி, எம்.கோவிந்த்காா்ஜோள், சி.என்.அஸ்வத்நாராயணா, அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி, ஷோபா கரந்தலஜே, என்.ரவிக்குமாா், மகேஷ் தெங்கினகாயி, ஆா்.அசோக், பி.சி.மோகன், ஸ்ரீராமுலு, பிரதாப்சிம்ஹா, வி.சோமண்ணா, பசவராஜ் பொம்மை, ரமேஷ் ஜிகஜினகி, பிரபாகா்கோரே, நிா்மல்குமாா்சுரானா, சசிகலா ஜொள்ளே, சுரேஷ் அங்கடி, செலுவாதி நாராயணசாமி, ஸ்ருதி, தாரா அனுராதா, ராஜூகௌடா, பாரதிஷெட்டி, சி.சி.பாட்டீல், பி.ஜே.புட்டசாமி, உமேஷ்கத்தி, கோட்டா சீனிவாஸ்பூஜாரி, பிரபுசௌஹான், எஸ்.ஆா்.விஸ்வநாதன், ஜே.சி.மாதுசாமி என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT