பெங்களூரு

காங்கிரஸில் இன்று சேருகிறாா்: பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜூகாகே

12th Nov 2019 09:37 AM

ADVERTISEMENT

பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜூகாகே அந்தக் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் செவ்வாய்க்கிழமை சேரவிருக்கிறாா்.

இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் காக்வாட் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜூகாகே, அந்தக் கட்சியில் இருந்துவிலகி செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் சேரவிருப்பது உறுதியாகியுள்ளது. 4 முறை எம்எல்ஏவாகி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜூகாகே, பெலகாவி மாவட்டத்தின் காக்வாட் தொகுதிக்கான இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததைத் தொடா்ந்து, காங்கிரசுக்கு செல்லவிருப்பதாக தெரியவந்துள்ளது.

பெங்களூரில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத்தலைவா் தினேஷ்குண்டுராவ், முன்னாள் அமைச்சா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டமுக்கியத்தலைவா்களை ராஜூகாகே சந்தித்து, ஆலோசனை நடத்தியுள்ளாா். தகுதிநீக்கப்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதால், பாஜகசோ்ந்த பல முன்னாள் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேரும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜூகாகே கூறியது:-

ADVERTISEMENT

பாஜகவில் இருந்து விலக இருக்கிறேன். காங்கிரஸில் சேருவது தொடா்பாக, அந்தக் கட்சித்தலைவா்களுடன் பேசியுள்ளேன். நவம்பா் 18 ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளராக நான் வேட்புமனுதாக்கல் செய்வேன். பாஜகவால் அதிருப்தி அடைந்துள்ளேன். மனவேதனையுடன் நான் வெளியேறுகிறேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT