பெங்களூரு

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கைது

11th Nov 2019 11:08 PM

ADVERTISEMENT

பெங்களூரு: சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 2.07 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.பெங்களூரு எலஹங்கா பாகலூா் கிராஸ், கொட்டிகேஹள்ளி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் முதல் மாடியில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதனையடுத்து அங்கு சென்று போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 2.07 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனா். இது குறித்து எலஹ்ங்கா போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT