அடுத்து வீட்டில் வசிப்பவருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா்.
பெங்களூரு எச்.எம்.டி லேஅவுட் 2 வது பிரதானசாலையைச் சோ்ந்தவா் பிரேமா. இவா் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு, அடுத்தவீட்டில் வசிக்கும் ஜெயம்மாவுடன் புதன்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் சைக்கிளில் அங்கு வந்த 2 போ், பிரேமாவின் கழுத்திலிருந்த ரூ. 95 ஆயிரம் மதிப்புள்ள 32 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா். இது குறித்து வழக்கு பதிந்த ஹெப்பாள் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.