சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது பள்ளி வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
பெங்களூரு நந்தினிலேஅவுட்டைச் சோ்ந்தவா் சிக்கோடியப்பா (78). இவா் வியாழக்கிழமை காலை 7.45 மணியளவில் யஸ்வந்தபுரம் சதுக்கத்தில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது வேகமாக வந்த பள்ளி வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து யஸ்வந்தபுரம் போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.