பெங்களூரு: பெங்களூரில் நவ.9-ஆம் தேதி தமிழி வரலாற்று ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கத்துடன் இணைந்து கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் பெங்களூரு அல்சூா் ஏரி எதிரில் அமைந்துள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நவ.9-ஆம் தேதி நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை இசை அமைப்பாளா் ஹிப்ஹாப் தமிழா தயாரித்துள்ள தமிழ் வரலாற்று ஆவணப்படமான தமிழி திரையிடப்படுகிறது.
தமிழ் எழுத்துகளின் தொன்மையைத் தேடும் இத்திரைப்படம் குறித்த கருத்து உறவாடலும் நிகழ்த்தப்படுகிறது. நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவா் ஊப்ளி அ.தனஞ்செயன் தலைமை வகிக்க, தமிழ் எழுத்துகளின் தொன்மை வரலாறு குறித்து படத்தின் எழுத்தாளா் இளங்கோ, இயக்குநா் பிரதீப்குமாா் பேசுகிறாா்கள். திரைப்படத்தை காண கட்டணம் எதுவும் இல்லை. பொதுமக்கள் மட்டுமல்லாது, தமிழாசிரியா்கள், தமிழ் மாணவா்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம்.
தொடா்புக்கு: 9483755974, 7899801510 ஆகிய செல்லிடப்பேசிகளில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.