"பானி' புயல்: ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து

"பானி' புயல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

"பானி' புயல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: "பானி' புயல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ரயில் சேவைகள் தற்காலிகமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  ரயில் எண்-77416/77417-குன்டக்கல்-பெல்லாரி-குன்டக்கல் பயணிகள் ரயில் மே 9-ஆம் தேதி வரையும், ரயில் எண்-77418-குன்டக்கல்-இந்துப்பூர் பயணிகள் ரயில் மே 9-ஆம் தேதிவரையும், ரயில் எண்-77419-இந்துப்பூர்-குன்டக்கல் பயணிகள் ரயில் மே 10-ஆம் தேதி வரையும், ரயில் எண்-57452/57451-குன்டக்கல்-சிக்ஜாஜூர்-குன்டக்கல் பயணிகள் ரயில் மே10-ஆம் தேதி வரையும், ரயில் எண்-56501-விஜயவாடா-ஹுப்பள்ளி பயணிகள் மே 9-ஆம் தேதிவரையும், ரயில் எண்-56502-ஹுப்பள்ளி-விஜயவாடா பயணிகள் ரயில் மே 8-ஆம் தேதி வரையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல ரயில் என்-57274-திருப்பதி-ஹுப்பள்ளி பயணிகள் மே 9-ஆம் தேதி வரையும், ரயில் எண்-57273-ஹுப்பள்ளி-திருப்பதி பயணிகள் ரயில் மே 10-ஆம் தேதி வரையும், ரயில் எண்-17419-திருப்பதி-வாஸ்கோடாகாமா விரைவுரயில் மே 9-ஆம் தேதிவரையும், ரயில் எண்-17420-வாஸ்கோடாகாமா-திருப்பதி விரைவுரயில் மே 10-ஆம் தேதி வரையும், ரயில் எண்-17021-ஹைதராபாத்-வாஸ்கோடாகாமா விரைவு ரயில் மே 9-ஆம் தேதி வரையும், ரயில் எண்-17022-வாஸ்கோடாகாமா-ஹைதராபாத் விரைவுரயில் மே 10-ஆம் தேதிவரையும்,ரயில் எண்-17307/17308-மைசூரு-பாகல்கோட் விரைவு ரயில் மே 8-ஆம் தேதிவரையும், ரயில் எண்-16571-யஷ்வந்த்பூர்-பீதர் விரைவு ரயில் மே 7-ஆம் தேதி வரையும், ரயில் எண்-16572-பீதர்-யஷ்வந்த்பூர் விரைவு ரயில் மே 8-ஆம் தேதி வரையும், ரயில் எண்-16583-யஷ்வந்த்பூர்-லத்தூர் ரயில் மே 8-ஆம் தேதி வரையும்,ரயில் எண்-16584-லத்தூர்-யஷ்வந்த்பூர் விரைவு ரயில் மே 9-ஆம் தேதி வரையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து: ரயில் எண்-57477-திருப்பதி-கத்ரிதேவரப்பள்ளி பயணிகள் ரயில் தர்மாவரம்-கத்ரிதேவரப்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே மே 8-ஆம் தேதி வரையும், ரயில் எண்-57478-கத்ரிதேவரப்பள்ளி-திருப்பதி பயணிகள் ரயில் கத்ரிதேவரப்பள்ளி-தர்மாவரம் ரயில் நிலையங்களுக்கு இடையே மே 9-ஆம் தேதி வரையும், ரயில் எண்-11311-சோலாப்பூர்-ஹாசன் விரைவு ரயில் யஷ்வந்த்பூர்-ஹாசன் ரயில் நிலையங்களுக்கு இடையே மே 9-ஆம் தேதி வரையும், ரயில் எண்-11312-ஹாசன்-சோலாப்பூர் விரைவுரயில் ஹாசன்-யஷ்வந்த்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மே 9-ஆம் தேதி வரையும் தற்காலிகமாக ரத்துசெய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com