பெங்களூரு

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 389 ஆட்டோக்கள் பறிமுதல்

29th Jun 2019 10:01 AM

ADVERTISEMENT

பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 389 ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேற்கு மண்டல போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பயணிகள் அழைத்த இடங்களுக்கு வர மறுத்தது, மீட்டர்களை திருத்தியது உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். உப்பார்பேட்டை, சிக்பேட்டை, சிட்டிமார்கெட், மாகடிசாலை, கெங்கேரி, மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், யஸ்வந்தபுரம், பீன்யா, ஜாலஹள்ளி, பசவனகுடி, ஜெயநகர், குமாரசாமி லேஅவுட், பனசங்கரி உள்ளிட்ட 18 போக்குவரத்து காவல் சரகங்களில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
இதில் விதிமுறைகளை மீறிதாக 389 ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 2384 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிகபட்சமாக ராஜாஜிநகர் போக்குவரத்து காவல் சரகத்தில் 239 பேர் மீதும், குறைந்தபட்சமாக ஜாலஹள்ளி போக்குவரத்து காவல் சரகத்தில் 120 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT