பெங்களூரு

மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

31st Jul 2019 08:41 AM

ADVERTISEMENT

பெங்களூரு எம்ஜி சாலை முதல் பைப்பனஹள்ளி இடையே ஆக. 3,4-ஆம் தேதிகளில் மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
 இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் சார்பில் பெங்களூரு வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கிவருகிறது. நாகசந்திரா முதல் புட்டேனஹள்ளி வரையிலான பச்சை வழித்தடம் முழுமையாக செயல்பட்டுவருகிறது.
 ஊதா வழித்தடத்தில் பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலான பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் ஆக.3-ஆம் தேதி இரவு 9.30 மணிமுதல் ஆக.4-ஆம் தேதி காலை 11 மணிவரை எம்.ஜி.சாலை முதல் பைப்பனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிமாக நிறுத்தப்படும்.
 எம்.ஜி.சாலை முதல் மைசூருசாலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஆக.3-ஆம் தேதி இரவு 9.30 மணிமுதல் ஆக.4-ஆம் தேதி காலை 11 மணி வரை வழக்கம்போல் இயங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT