பெங்களூரு

இன்று சட்டப்பேரவைக் கூட்டம்: விதான செளதா பகுதியில் 144 தடை உத்தரவு  

31st Jul 2019 08:41 AM

ADVERTISEMENT

பெங்களூரு விதான செளதாவில் புதன்கிழமை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதையொட்டி 2 கி.மீ சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ஆலோக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 பெங்களூரு விதான செளதாவில் உள்ள சட்டப்பேரவையில் ஜூலை 31-ஆம் தேதி பேரவைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி ஜூலை 31-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை விதானசெளதாவை சுற்றியுள்ள 2 கி.மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடி பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT