பெங்களூரு

"தேசிய அளவில் பிரசவத்தின்போது குழந்தைகள் இறப்பது குறைந்துள்ளது'

29th Jul 2019 08:20 AM

ADVERTISEMENT

தேசிய அளவில் பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பது குறைந்துள்ளது என்று அப்பலோ மருத்துவக் குழுமத்தின் மேலாண் இயக்குநர் சங்கீதா ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற குழந்தைகளுக்கான தொட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:  தேசிய அளவில் பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பது குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  என்றாலும்,  பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பதை முழுமையாகத் தடுக்க வேண்டும்.  இதற்கான முயற்சியில் அப்பல்லோ குழுமம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர,  கர்ப்பிணிப் பெண்கள் காற்றோட்டமுள்ள ஆடைகளை அணிய வேண்டும்.  கற்றோட்டமுள்ள ஆடைகள் அணிவதன் மூலம் கருவில் உள்ள குழந்தைகள் நல்ல முறையில் வளர்ச்சி அடையும்.  தொட்டிலில் தாலாட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறுகின்றன.  இதனைக் கருத்தில் கொண்டு தொட்டில் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில்,  அக் குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி அனுபவ் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT