பெங்களூரு

கட்டடப் பணியின் போது கீழே விழுந்து தொழிலாளி பலி

29th Jul 2019 08:21 AM

ADVERTISEMENT

கட்டடப் பணியின் போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கோயிமுல்லா (25), அப்துல் ஜாகீர் (26). இவர்கள் இருவரும் பெங்களூரில் தனியாருக்குச் சொந்தமான பள்ளி ஒன்றில், கட்டுமானப் பணியில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனர்.  அப்போது கட்டடத்தின் 5-வது மாடியில் பணியில் ஈடுபட்ட கோயிமுல்லா,  அப்துல் ஜாகீர் இருவரும் சாரம் முறிந்ததில் கீழே விழுந்துள்ளனர்.  இதில் நிகழ்விடத்திலேயே கோயிமுல்லா உயிரிழந்துள்ளார்.  காயமடைந்த அப்துல் ஜாகீர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து பாகலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT