பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் புவிதகவலியல் துறையில் பகுதிநேர விரிவுரையாளர்களாகப் பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக, எம்எஸ்சி(புவியியல், புவிதகவலியல், இயற்கை பேரிடர் மேலாண்மை) போன்ற முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதி படைத்தவர்களிடம் இருந்து இப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய தகுதித் தேர்வு, மாநில தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர், வணிகப் படிப்பில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்தோர்,ஆசிரியப் பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப் பணிக்குத் தேவையான கல்வித்தகுதி உள்ளிட்டவிவரங்கள் குறித்து www.bangaloreuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 18-ஆம் தேதிக்குள் தலைவர், புவியியல் மற்றும் புவிதகவலியல் துறை, ஞானபாரதி வளாகம், பெங்களூரு-560056 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.