பெங்களூரு

2 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும்

12th Jul 2019 08:48 AM

ADVERTISEMENT

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என அக் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் சித்தராமையா பேரவைத் தலைவரிடம் கோரிக்கை  வைத்துள்ளார்.
கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்து, மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரைச் சந்தித்து, மீண்டும் ராஜிநாமா கடிதம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரை, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் சித்தராமையா சந்தித்து கட்சி தாவல் தடை சட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோகாக் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் ஜார்கிஹோளி, அதானி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மகேஷ் கும்மட்டஹள்ளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 
கடந்த ஜனவரி மாதத்தில் சதீஷ் ஜார்கிஹோளி, மகேஷ்குமட்டஹள்ளி ஆகியோர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT